CRIME
“அய்யோ ச்சீ..” இரவு உணவில் கிடந்த ‘அது’.. JNTU மாணவர்களின் உயிருடன் விளையாடிய விடுதி நிர்வாகம்.. நள்ளிரவில் வெடித்த போராட்டம்..!!
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஜேஎன்டியூ பல்கலைக்கழகத்தின் மஞ்ஜீரா மாணவர்கள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்த அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வழக்கம்போல் இரவு உணவு வற்புறுத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த கறியில் செத்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விடுதி நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், நள்ளிரவிலும் தங்களின் உணவுகளைத் தூக்கி எறிந்து விடுதி வளாகத்தில் அதிரடியாக ஒன்று கூடிப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் உடல்நலம் மற்றும் உயிருடன் விளையாடும் விடுதி சமையல் கூடத்தின் மோசமான தரம் குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் காரசாரமாகக் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அசுத்தமான முறையில் உணவைத் தயாரித்த சமையல் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இச்சம்பவம், கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் விடுதி உணவுகளின் தரம் குறித்த பெரும் கவலையை மீண்டும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
