LATEST NEWS
“எங்கும் ஓடி விடமாட்டேன்” மனஉளைச்சலா இருக்கு.. நான் தூங்கும்போது கூட என் அறையில்.. நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு குமுறல்..!!
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாம் எங்கும் ஓடிவிடமாட்டேன் என்றும், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிறையில் தமக்கு மருந்துகள் கூட முறையாக வழங்கப்படவில்லை என்றும், தாம் தூங்கும் போது கூட விளக்கை எரியவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றும், மாநில நலனுக்காகத் தாமும் தமது குடும்பமும் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்துள்ளதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், தமது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தாம் தப்பவில்லை என்றும், ஆனால் முத்துகுமாரைத் தப்பிக்க வைத்ததாகத் தன் மீது வீண் பழி சுமத்துவதாகவும் அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த விவகாரம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சிறையில் இருக்கும் அன்பில் மகேஷுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அதே நேரத்தில், அவருக்குச் சிறையில் வீட்டு உணவு வழங்குவது குறித்துப் பரிசீலித்து, உரிய ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
