“என் பிள்ளைகளை ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க சார்..!” துரத்திவிட்ட மகன்களுக்காக கலங்கிய தாய்… நெஞ்சை உலுக்கும் நிஜ சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் பிள்ளைகளை ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க சார்..!” துரத்திவிட்ட மகன்களுக்காக கலங்கிய தாய்… நெஞ்சை உலுக்கும் நிஜ சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் கோத்வாலி பகுதியில், இன்ஸ்பெக்டர் மஹாவீர் சிங் தனது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரம் முதிய தாய் ஒருவர் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரிடம் சென்று விசாரித்தபோது, முதலில் எதையும் கூற மறுத்த அந்தத் தாயைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்து அன்போடு விசாரித்துள்ளனர். அப்போது அவர், தனக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும், அதில் ஒருவர் அரசு ஊழியராகவும் மற்ற இருவர் சொந்தமாகத் தொழில் செய்து வருவதாகவும் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, வசதியாக வாழும் இந்த மூன்று மகன்களும் சேர்ந்து தன்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாகக் கூறி அவர் கதறி அழுதார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் மஹாவீர் சிங், கிராமப் பிரதானி மூலம் அந்த மூன்று மகன்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். “நீங்கள் சிறிய குழந்தைகளாக இருந்தபோது ஒற்றை ஆளாக உங்களை வளர்த்தெடுத்தவர் இந்தத் தாய். இன்று நீங்கள் பெரிய ஆளாக வளர்ந்து, அவர் முதியவரான பிறகு உங்களால் ஒரு தாயைக் கூடக் கவனித்துக் கொள்ள முடியவில்லையா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று அவர்களுக்குக் கடுமையான முறையில் புத்திமதி கூறி எச்சரித்தார். போலீசாரின் நீண்ட நேர அறிவுரைக்குப் பிறகு, மகன்கள் தங்களின் தவறை உணர்ந்து, தாயைத் தங்களோடு அழைத்துச் செல்லச் சம்மதித்தனர்.

Advertisement

ஆனால், மகன்கள் தன்னை அழைத்துச் செல்லச் சம்மதித்ததை அறிந்தவுடன், அந்த முதிய தாய் மீண்டும் ஓடிவந்து இன்ஸ்பெக்டர் மஹாவீரின் நெஞ்சில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். இதற்கான காரணத்தைக் கேட்டபோது, “என் பிள்ளைகளை நீங்கள் ஜெயிலில் அடைத்துவிடுவீர்களோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது, தயவுசெய்து அவர்களைச் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள், இன்ஸ்பெக்டர் சாஹிப்” என்று தனது மகன்களுக்காகக் கெஞ்சியுள்ளார். பிள்ளைகள் தன்னை நடுத்தெருவில் விட்டாலும் அவர்களின் பாதுகாப்பிற்காக உருகும் ஒரு ‘தாயின் பாசத்தைக்’ கண்டு அங்கிருந்த போலீசார் நெகிழ்ந்து போயினர். இன்ஸ்பெக்டரும் சட்டப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டேன் என உறுதியளித்த பின்னரே, அந்தத் தாய் நிம்மதியுடன் தனது மகன்களோடு வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in