“தாய் தானே எல்லாம்” மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாய்க்காக புல்லாங்குழல் வாசித்த முன்னாள் முதல்வர்.. இணையவாசிகளை நெகிழ வைத்த வைரல் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாய் தானே எல்லாம்” மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாய்க்காக புல்லாங்குழல் வாசித்த முன்னாள் முதல்வர்.. இணையவாசிகளை நெகிழ வைத்த வைரல் வீடியோ..!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய்க்கு புல்லாங்குழல் வாசித்து மகிழ்வித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது தாய் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தைரியம் அளிக்கவும், மனமகிழ்ச்சியை ஏற்படுத்தவும் அர்ஜுன் முண்டா தாயின் அருகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துள்ளார். அந்த இனிய இசையைக் கேட்டதும், நோய்ப் படுக்கையில் இருந்த தாயின் முகத்தில் புன்னகை மலர்ந்துள்ளது.

Advertisement

இந்தத் தருணத்தை அர்ஜுன் முண்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “என் வாழ்வில் கிடைத்த மிகவும் விலைமதிப்பற்ற வரம் அம்மா. அவரது அன்புதான் என் மிகப்பெரிய பலம். அவரது ஆசீர்வாதங்கள்தான் என் ஆதரவு; அவரது வாழ்க்கைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்” எனத் தனது தாயின் மீதான அன்பை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in