கொடூரம்..! சொந்த மக்களைக் கொன்றுகுவிக்கும் எத்தியோப்பியா… ட்ரோன் தாக்குதலில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட 25 பேர் துடிதுடித்து பலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொடூரம்..! சொந்த மக்களைக் கொன்றுகுவிக்கும் எத்தியோப்பியா… ட்ரோன் தாக்குதலில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட 25 பேர் துடிதுடித்து பலி..!!

Published

on

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுப் படைகள் நடத்திய தொடர்ச்சியான ட்ரோன் (டிரோன்) தாக்குதல்களில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மீது நடத்தப்பட்ட 5 அடுத்தடுத்த தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், டிக்ரே பிராந்தியத்தின் ரமா நகரில் தானியம் ஏற்றிச் சென்ற லாரி மற்றும் அதன் அருகில் சிதறிய தானியங்களைச் சேகரிக்கக் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

எத்தியோப்பியாவில் செயல்பட்டு வரும் ‘டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி’ மற்றும் ‘அம்ஹாராவின் பானோ கிளர்ச்சியாளர்களுக்கு’ எதிராக அரசுப் படைகள் கடந்த ஒரு மாதமாக இந்த வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதாகக் கூறி, அரசுப் படைகள் திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

இக்குற்றச்சாட்டுகளை எத்தியோப்பிய ராணுவத் தளபதிகள் மறுத்துள்ளனர். தீவிரவாதக் குழுக்களை மட்டுமே துல்லியமாகத் தாக்கி வருவதாகவும், பொதுமக்கள் யாரும் தங்களின் இலக்கு அல்ல என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், மக்கள் வாழும் பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது பொதுமக்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளதோடு, இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச சமூகம் எத்தியோப்பிய அரசிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in