LATEST NEWS
“மேயர் சொல்றது FUNNY-ஆ இருக்கு!” “CM எப்போ வராருனு மேயருக்கு தெரியாதா.? மேயர் பிரியாவின் புகாருக்கு அமைச்சர் மேரி வில்சன் சுளீர் பதில்..!!
சென்னை மேயர் ஆர். பிரியாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் என். மேரி வில்சன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். ரிப்பன் மாளிகைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்விற்காக வரும்போது, அதுகுறித்து தனக்கு எவ்வித அதிகாரப்பூர்வத் தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், தன்னைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகவும் மேயர் பிரியா குற்றம் சாட்டியிருந்தார். இப்புகாரை முழுமையாக மறுத்துள்ள அமைச்சர், அரசின் செயல்பாடுகள் அனைத்தும் நெறிமுறைகளின் படியே சரியாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேயர் பிரியாவின் இந்த விமர்சனம் வேடிக்கையாக (Funny) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மேரி வில்சன், ஒரு மாநகராட்சியின் மேயராக இருக்கும் ஒருவருக்கு, முதலமைச்சர் எப்போது வருகிறார், எப்போது செல்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறுவது வியப்பளிப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இத்துடன், தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகார்களையும் அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி எதிர்மறைப் பாதையிலிருந்து நேர்மறையான 3.2 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், திட்டமிட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களால் நிதி நிலைமை மேம்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேரி வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
