LATEST NEWS
FLASH:”புதுசா ரிலீஸ் ஆகுற படங்களுக்கு மாஸ் ஆஃபர்..”அதிகாலை 6 மணி டூ நள்ளிரவு 2:30 வரை..! TN அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு, காலை 6 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2:30 மணி வரை தினமும் 6 காட்சிகள் வரை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாள்கள், பொது விடுமுறை நாள்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் 6 காட்சிகள் திரையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
