“சீட் கிடைச்ச செய்தி தெரியாமலேயே…” நீட் மாணவி எடுத்த விபரீத முடிவு.. 8 பக்க கடிதத்தில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“சீட் கிடைச்ச செய்தி தெரியாமலேயே…” நீட் மாணவி எடுத்த விபரீத முடிவு.. 8 பக்க கடிதத்தில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த ரிது சர்மா (18) என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பொறியாளரின் மகளான இவர், கடந்த திங்கட்கிழமை அன்று தனது வீட்டில் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் இவரது மரணம் இடஒதுக்கீடு முறையினால் ஏற்பட்டது என்ற தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை மற்றும் மாணவி எழுதிய 8 பக்க தற்கொலைக் குறிப்பின்படி, அவர் கடுமையான மன அழுத்தம் மற்றும் ‘ஓசிடி’ எனப்படும் தீவிர மனநலப் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விபரீத முடிவு நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே, நீட் தேர்வின் மூன்றாவது சுற்று கலந்தாய்வு முடிவுகளில் அவருக்கு சோன்பத்ராவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்தது. முதல் இரண்டு சுற்றுகளில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் அவர் இருந்தபோதிலும், மூன்றாவது சுற்றில் அவருக்கு சீட் கிடைத்துள்ளது. தனக்கு சீட் கிடைத்த செய்தி தெரியவரும் முன்பே அவர் இந்த தீவிர முடிவை எடுத்துவிட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, இடஒதுக்கீட்டால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது என்ற சமூக ஊடகக் கூற்றுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in