“அரசியல் வரலாற்றிலேயே இல்லாத புது ட்விஸ்ட்..” ஒட்டுமொத்த ஊரையும் ஒன்று சேர்த்த ஒரு காதல் திருமணம்.. ராஜஸ்தானில் அரங்கேறிய சுவாரசிய அரசியல் யுக்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசியல் வரலாற்றிலேயே இல்லாத புது ட்விஸ்ட்..” ஒட்டுமொத்த ஊரையும் ஒன்று சேர்த்த ஒரு காதல் திருமணம்.. ராஜஸ்தானில் அரங்கேறிய சுவாரசிய அரசியல் யுக்தி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் காரோலி மாவட்டத்தில் உள்ள கூடாலா கிராமத்தில், ஒரு காதலாலும் மற்றும் புத்திசாலித்தனமான தேர்தல் யுக்தியாலும் ஒட்டுமொத்த கிராம மக்களும் பயனடைந்து வரும் ஒரு சுவாரசியமான காதல் திருமணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடாலா கிராமத்தின் சர்பஞ்ச் எனப்படும் ஊராட்சித் தலைவர் பதவி பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிராமத்தின் மக்கள் தொகையில் 70% பேர் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கிராம மக்கள் கவலையடைந்தனர். அந்தச் சமயத்தில், கிராமத்தைச் சேர்ந்த ராகுல் குஜ்ஜார் என்ற இளைஞர் ஒரு சாமர்த்தியமான யோசனையை முன்வைத்தார்.

ராகுல் குஜ்ஜார் தான் காதலித்து வந்த பழங்குடியினசமூகத்தைச் சேர்ந்த நைனா தன்கா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அவரை அந்தச் சர்பஞ்ச் தேர்தலில் வேட்பாளராகக் களம் இறக்கினார். இந்தக் காதல் திருமணக் கூட்டணிக்குக் கிராம மக்கள் அமோக ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, நைனா தன்கா 2,470 வாக்குகள் என்ற சாதனைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அந்த ஊரின் புதிய சர்பஞ்ச் ஆனார். இந்த வெற்றிகரமான அரசியல் யுக்தி மற்றும் காதல் திருமணம் ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநில தேர்தல் வரலாற்றிலும் ஒரு புதிய திருப்பமாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in