பெரும் பரபரப்பு..! “என் போனை ஒட்டுக்கேட்கிறார் பிரதமர் மோடி” பெகாசஸ் விவகாரத்தைக் கையில் எடுத்து ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! “என் போனை ஒட்டுக்கேட்கிறார் பிரதமர் மோடி” பெகாசஸ் விவகாரத்தைக் கையில் எடுத்து ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு..!!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் நடைபெற்ற ‘என்னிடம் கேளுங்கள்’ என்ற நேரலை உரையாடலில் பங்கேற்ற அவர், பெகாசஸ் கருவி மூலம் தனது தொலைபேசியையும், பல்வேறு அரசியல் தலைவர்களின் தொலைபேசிகளையும் மத்திய அமைப்புகள் கண்காணித்து வருவதாகக் கூறினார். கடந்த 12 நாட்களில் ஏழாவது முறையாகப் பிரதமருக்குச் சவால் விடுத்துள்ள ராகுல் காந்தி, யார் வெளிநாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது குறித்துத் தன்னுடன் நேருக்கு நேர் பொது விவாதம் நடத்த வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் குளறுபடிகள் நடப்பதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். முன்னதாக 2023-ம் ஆண்டிலும் இதேபோன்ற ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார். தனது உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதால் கவனமாக இருக்குமாறு உளவுத்துறை அதிகாரிகளே தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்தத் தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் காந்தியின் நேரடி விவாத அழைப்புக்குப் பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஏற்கனவே தயாராக இருக்கும்போது, அதற்கெனத் தனி இடத்தைத் தேர்ந்தெடுக்குமாறு ராகுல் காந்தி ஏன் பிரதமரிடம் கேட்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in