“அடச்சீ நீயெல்லாம் பெத்த தாயா..?” பூட்டிய வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்… கதவை உடைத்துப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. 8 மாத குழந்தைக்கு என்னாச்சு..? அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் பெத்த தாயா..?” பூட்டிய வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்… கதவை உடைத்துப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. 8 மாத குழந்தைக்கு என்னாச்சு..? அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், தாய்மைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் எட்டு மாதப் பெண் குழந்தையைச் சூட்கேஸில் வைத்துப் பூட்டிவிட்டுத் தாய் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோம்வார்பேட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட ஜாம்பூர் கிராமத்தில், சென்னையில் பணியாற்றி வரும் நபரின் மனைவி தனது எட்டு மாதக் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நண்பகல் வாக்கில் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இரவு சுமார் 10 மணியளவில் பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையின் தாயைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் மடிக்கேரியில் உள்ள குழந்தையின் பாட்டிக்குத் தகவல் தெரிவித்தனர். பாட்டி மற்றும் உள்ளூர் மக்கள் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, 8 மாதக் குழந்தை ஒரு சூட்கேஸிற்குள் வைத்துப் பூட்டப்பட்ட நிலையில் மூச்சுத்திணறலுடன் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகக் குழந்தையை மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக மடிக்கேரி மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Advertisement

மருத்துவமனையில் பரிசோதித்தபோது, நீண்ட நேரம் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்ததால் குழந்தைக்கு ஆக்சிஜன் குறைபாடு, மூச்சுத்திணறல், காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருப்பது தெரியவந்தது. குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது. ஒரு தாய் தனது சொந்தக் குழந்தையை எதற்காகச் சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in