CRIME
“எனக்கு யாருமே இல்லை..” 3 திருமணங்களுக்குப் பிறகும் அடங்காத மோகம்.. இளம்பெண்ணை வரவழைத்து 4-வது கணவர் செய்த கொடூரச் சம்பவம்..! நடுங்க வைக்கும் பின்னணி..!!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுவேதா (24). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது, அங்கு டிரைவராக வேலை பார்த்த விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டதாகவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லை எனவும் சுவேதா கூறியதை உண்மை என நம்பிய அஜித்குமார், அவரை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு வத்திராயிருப்பில் சில காலம் வசித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிய தம்பதியரிடையே, சுவேதா எந்நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன்பிறகு சுவேதாவின் பின்னணி குறித்து அஜித்குமார் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சுவேதாவிற்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருப்பதும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் எரியோட்டில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த உண்மைகள் வெளிவந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை வெடிக்க, சுவேதா சென்னைக்கு வராமல் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் பழைய பிரச்சினைகளை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் எனக் கூறி, கடந்த மாதம் சுவேதாவின் பெற்றோர் வீட்டினருகே வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த போதிலும், சுவேதா தொடர்ந்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்ததால் இருவருக்குள்ளும் சண்டை ஓயவில்லை.
இந்நிலையில் தீபாவளியன்று சுவேதாவின் செல்போனை பார்த்துவிட்டு அஜித்குமார் சண்டை போட்டதில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அரிவாளால் சுவேதாவை சரமாரியாக வெட்டிவிட்டு எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுவேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அஜித்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
