CRIME
“4 மணி நேரத் திக் திக் நிமிடங்கள்..” உயிரைப் பணயம் வைத்து டவர் உச்சியில் ஏறிப் போராடிய சிறுமி.. பின்னணி என்ன..? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு ராகினி என்ற இளம்பெண் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி பள்ளியில் குடிநீர் பிடிப்பதில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ராகினியின் சகோதரரான கரண் சஹானி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர்.
ஆனால், காவல்துறையின் விசாரணையில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு, மற்ற மூவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பதின்ம வயதுச் சிறுமியான ராகினி, தனது சகோதரனின் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி உயரமான செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வ உறுதியளித்த பின்னரே அந்தப் பெண் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
