CRIME
மனிதநேயமற்ற வெறிச்செயல்.. தூங்கிக்கொண்டிருந்த தம்பதியருக்கு நேர்ந்த கொடூர கதி.. ஜாமீனில் வெளியே வந்த சைக்கோ கொலையாளி செய்த பயங்கரம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!1
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில், திருடும் நோக்கத்தில் வீட்டிற்குள் புகுந்த யோகேஷ் என்கிற பங்கா என்ற கொடூர குற்றவாளி, தம்பதியரை அடித்துக் கொன்றுவிட்டு மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சீவ் கத்தேரியா, அவரது மனைவி ஷிகா மற்றும் அவர்களது 2 வயது மகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, திருட வந்த யோகேஷ் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு சஞ்சீவ் விழித்துள்ளார்; உடனே யோகேஷ் கம்பால் அவரது தலையில் பலமாக அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த மனைவி ஷிகாவையும் சரமாரியாகத் தாக்கிக் கொன்ற அந்தக் கொடூரன், உயிரிழந்த ஷிகாவின் உடலைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 2 வயதுப் பெண் குழந்தையையும் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த 5,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், வனப்பகுதியில் பதுங்கியிருந்த யோகேஷை இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவன் ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டிலும் ஒரு தாயையும் மகளையும் இதேபோல் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் என்கவுண்டர் மூலம் பிடிபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவன் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த யோகேஷ், மீண்டும் இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
