கையில் ‘Trust No One’ டாட்டூ.. போனில் பாகிஸ்தான் லிங்க்.. சாதாரண ரெய்டில் சிக்கிய இளைஞர்களின் திடுக்கிடும் சதி..!! – cinefeeds
Connect with us

CRIME

கையில் ‘Trust No One’ டாட்டூ.. போனில் பாகிஸ்தான் லிங்க்.. சாதாரண ரெய்டில் சிக்கிய இளைஞர்களின் திடுக்கிடும் சதி..!!

Published

on

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி பகுதியின் பஹேடியில் சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பெரிய பயங்கரவாத வலைப்பின்னல் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களும் ஆயுதங்களை தயாரித்து விநியோகிக்கும் பணியில் மட்டும் ஈடுபட்டனரா அல்லது அவர்களுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினரும் பாதுகாப்பு ஏஜென்சிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. குறிப்பாக, இலக்கு வைத்து கொலை செய்யும் சதித்திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், கைதானவர்களில் இருவரது கைகளில் ஒரே மாதிரியான ஆங்கில வாசகத்துடன் ‘Trust No One’ (யாரையும் நம்பாதே) என்ற பச்சைக் குத்தப்பட்டிருப்பதும் அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பஹேடி காவல் துறையினரும் சிறப்புப் படைப் பிரிவினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் இந்த ஆயுதத் தொழிற்சாலை கண்டறியப்பட்டு நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஷேசாத் பட்டியின் ஹேண்ட்லர் அஜ்மல் குர்ஜாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கைதானவர்களின் செல்போன்கள், சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் உரையாடல் பதிவுகளை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். விசாரணையில், பஹேடியைச் சேர்ந்த சுக்ராஜ் என்பவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் அஜ்மல் குர்ஜாருடன் தொடர்பு ஏற்பட்டதும், அவரிடம் இருந்து சில முக்கியத் தகவல்களும் வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த விவகாரத்தின் தீவிரத்தலைக் கருத்தில் கொண்டு, முழு நெட்வொர்க்கையும் கண்டறிய எஸ்.எஸ்.பி அனுராக் ஆர்யா சிறப்புக் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார். கைதானவர்களைத் தவிர, தலைமறைவாக உள்ள குர்சேவக் மற்றும் அனஸ் ஆகிய இரு தேடப்படும் குற்றவாளிகளைப் பிடிக்க தலா 10,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நெட்வொர்க்கில் மேலும் பலர் தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்திலும், கடந்த 10 ஆண்டுகளில் அப்பகுதியில் வந்து குடியேறியவர்களின் பின்னணி குறித்தும் காவல்துறையினர் தீவிர சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in