CRIME
“ஐயோ காப்பாத்துங்க..” ஆற்றுக்குச் சென்ற 80 வயது மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற காம கொடூரன்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்.. பகீர் பின்னணி..!!
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர், நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மூதாட்டியைத் திடீரெனக் கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த மூதாட்டி, தன்னைக் காப்பாற்றுமாறு சத்தமாகக் கூச்சலிட்டுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகிலிருந்த பெண் ஒருவர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு ஓடி வந்ததோடு, அப்பகுதி மக்களும் திரண்டு வருவதைக் கண்ட அந்த மர்ம நபர் மூதாட்டியை அங்கேயே தள்ளிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதையடுத்து மூதாட்டியை மீட்ட பொதுமக்கள் இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய 35 வயது மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 80 வயது மூதாட்டியிடம் அதிகாலை நேரத்தில் அரங்கேறிய இக்கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
