தம்பிக்கு கல்யாணம் பண்ணுற, எனக்கு இல்லையா..? ஆத்திரத்தில் சொந்த வீட்டைக் கொளுத்திய அண்ணன்… நடந்தது என்ன..? பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தம்பிக்கு கல்யாணம் பண்ணுற, எனக்கு இல்லையா..? ஆத்திரத்தில் சொந்த வீட்டைக் கொளுத்திய அண்ணன்… நடந்தது என்ன..? பெரும் பரபரப்பு..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு மண்டலம் குடன்செருவு பகுதியில் உள்ள ராஜீவ் காலனியில், தனக்குத் திருமணம் செய்து வைக்காமல் தம்பிக்கு முதலில் திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் மூத்த மகன் சொந்த வீட்டிற்கே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா என்பவர், தன்னை விட இளையவரான தனது தம்பிக்குத் தாயார் முதலில் திருமணம் செய்து வைத்ததால் கடும் மனக்கசப்பிலும் ஆத்திரத்திலும் இருந்துள்ளார். தனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லையே எனக் கூறி அவர் தனது தாயாருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், வீட்டில் தாயார் இல்லாத நேரத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த சுரேந்திரா, வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் வீட்டிற்குள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in