“கருப்பு உடைக்கு அனுமதி இல்லை” ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஊழியருக்கு அனுமதி மறுப்பு… TCS வாசலில் திரண்ட இந்து அமைப்பினரால் உச்சகட்ட பதற்றம்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கருப்பு உடைக்கு அனுமதி இல்லை” ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஊழியருக்கு அனுமதி மறுப்பு… TCS வாசலில் திரண்ட இந்து அமைப்பினரால் உச்சகட்ட பதற்றம்!

Published

on

தெலங்கானா மாநிலம் அடிபட்லாவில் அமைந்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில், ஐயப்ப மாலை அணிந்து கருப்பு உடையில் பணிக்கு வந்த மணிஷ் என்ற ஊழியரை அலுவலகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளைக் காரணம் காட்டி, பாதுகாப்பு ஊழியர்கள் அவரை நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் மணிஷ் கூறுகையில், தாங்கள் ஐயப்ப மாலை அணியவிருப்பது குறித்தும், விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து வருவது குறித்தும் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுவனத்திடம் முறையாகத் தகவல் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முன்கூட்டியே அனுமதி கோரியிருந்த போதிலும், தற்போது திடீரெனப் பணிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சக ஐயப்ப பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், டி.சி.எஸ் நிறுவனத்தின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து பணிபுரிய ஊழியர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in