CRIME
“வா பாப்பா உணவு வாங்கி தருகிறேன்..” 4 வயது சிறுமிக்கு வயலுக்கு அழைத்துச் சென்ற 20 வயது இளைஞன் செய்த வெறிச்செயல்.. கதறும் பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
20 வயதான ரிஜ்பி யாதவ் என்பவர் தனது 4 வயது சொந்த மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு உணவு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வயல்வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற ரிஜ்பி, அங்கு வைத்து அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார். பின்னர், சிறுமி வீட்டிற்குச் சென்று நடந்த உண்மையைப் பெற்றோரிடம் கூறிவிடுவாள் என்ற அச்சத்தில், அவளைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் தங்களது பச்சிளம் குழந்தையை இழந்து மீள முடியாத துயரத்தில் இருந்த அந்தத் தம்பதியினருக்கு, தற்போது தங்களது 4 வயது மகளும் சொந்த உறவினராலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது தாங்க முடியாத பேரிடியாக அமைந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலால் நிலைகுலைந்து போயுள்ள சிறுமியின் பெற்றோர், குற்றவாளி ரிஜ்பி யாதவ் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் எனத் தங்களது ஆற்றாமையையும் கடும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இளம் வயதிலேயே மனிதநேயமற்று சொந்த உறவையே சிதைத்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
