Uncategorized
“போஸ்ட்மேன் வீட்டில் உதயநிதிக்கு என்ன வேலை?” அன்னைக்கு அப்படி பேசினீங்களே… உதயநிதியின் ஆளுநர் சந்திப்பைக் கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்..!!
ஆளுநரை ‘போஸ்ட்மேன்’ என விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அதே ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்திருப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்
. கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதயநிதி மனு அளித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், ஆளுநர் மற்றும் பாஜகவிடம் திமுக சரணடைந்துவிட்டதா என்றும், திமுக நிர்வாகிகள் மீதான அமலாக்கத்துறை (ED) வழக்குகளுக்காகச் சமரசம் முடிந்துவிட்டதா என்றும் சாடியுள்ளார்.
ஆளுநர்கள் அரசியல் செய்யாமல் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்த மாணிக்கம் தாகூர், காலம் காலமாக எதிர்த்துவிட்டு தற்போது திமுக வாலைச் சுருட்டிக்கொண்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்று நிற்பதாக விமர்சித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நல்லாட்சி வழங்கி வரும் தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக ஐடி விங் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தவெக அமைச்சர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை எனத் தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், தவெக அரசாங்கம் தங்களுடைய அரசாங்கம் என்றும், எந்தத் துறையில் குறை இருந்தாலும் அதனைத் தாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.
