LATEST NEWS
அப்படிப்பட்ட மனுஷன் நினைச்சத…. இந்த மனுஷன் முடிச்சிட்டாரு….. புகழாரம் சூட்டிய பார்த்திபன்….!!!!
தமிழில் கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையராக நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது” டிராப்ட் ப்ராஜெக்ட் என்ற தலைப்பில் இன்று பார்த்தேன். உண்மையில் அவர் அந்த கனவு திட்டத்திற்காக சினிமா துறையில் ஒரு விதையை விதைத்தவர். பொன்மனச் செம்மலின் பொன்னியின் செல்வன், எண்ணங்களில் உயர்ந்தவர் என்றோ.. முதல்வராகிவிட்டார்.
Dropped project என்ற தலைப்பில் இன்று பார்த்தேன்.Actually HE just dropped a seed in (cine)field for this dream project!
பொன்மனச் செம்மலின்
பொன்னியின் செல்வன்’
எண்ணங்களில் உயர்ந்தவர்,என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.’நினைத்ததை முடிப்பவன்’-அவர் நினைத்ததை எல்லாம் pic.twitter.com/sxSO8LBwZO— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 4, 2022
இக்காவியம் படைக்க.’ நினைத்ததை முடிப்பவன்’-அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் சிஎம் (CM) உட்பட! அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார். விதைச்சது எம்ஜிஆர் விளைச்சது எம்ஆர். நமக்கது பெருமை! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
