LATEST NEWS
ஹாரி பார்ட்டர் திரைப்பட நடிகர் மரணம்….. பெரும் சோகம்….!!!!!
பிரபல ஹாலிவுட் நடிகரான ரூபி கால்ட்ரணி திடீரென்று உயிரிழந்தார். ஹரிபாட்டர் ஏழு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இதுவரை எட்டு திரைப்படங்களாக வெளியாகி உள்ளது. ஹாரி பாட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஹாரி பாட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரணி . இவருக்கு வயது மூப்பு காரணமாக தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஸ்காட்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் திடீரென்று சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
