LATEST NEWS
குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை….!ஆனால் திருமணம் மனம் திறந்த தமன்னா……!!!
சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா .இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார், கிட்டத்தட்ட 17 வருடங்களாக சினிமாவில் படித்து வருகிறார். தற்போது இவருக்கு 32 வயது ஆகின்றது .இதனால் திருமணம் செய்து வைக்க அவர்கள் பெற்றோர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த நடிகை தமன்னா தெரிவித்ததாவது எல்லோரையும் போல எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றனர் ,எனக்கு திருமணம் அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது .திருமணம் செய்து கொள்ள வேண்டும், தாயாக வேண்டும் என்று ஆசை இருக்கின்றது.
தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் உள்ளேன் மிகவும் பிசியாக உள்ளதால் என் பெற்றோரிடம் தொலைபேசியில் பேச கூட முடியாத நிலையில் இருக்கின்றேன். இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில் உள்ளது ,எனது தொழிலை நான் அந்த அளவிற்கு நேசிக்கிறேன், என்று அவர் தெரிவித்திருந்தார்.
