VIDEOS
ராஷ்மிகாவை மிஞ்சிய நடிகை அதிதி சங்கர்….. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…. மிரண்டு போன ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார். அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கமிட்டாகி அதிதி சங்கர் நடித்து வருகின்றார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சமீப காலமாக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அவ்வகையில் தற்போது அதிதியின் தோழியும் பிரபல நடிகையுமான இந்திரஜா சங்கர் அதிதியுடன் சேர்ந்தேன் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவையே மிஞ்சும் அளவிற்கு நடனம் ஆடுறீங்க என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
