VIDEOS
கனெக்ட் திரைப்படத்தின் திக் திக் நிமிடங்கள்…. இணையத்தை தெறிக்க விடும் நயன்தாராவின் ட்ரைலர்…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நயன்தாரா மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாரர் மற்றும் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரில் திக் திக் நிமிடங்களுடன் நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
