TRENDING
பறக்கும் கேமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட காட்சி… விமானி அனுப்பிய கடைசி செய்தி … சிதறி கிடந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் சென்ற விமானம்…
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் கலாபசாஸ் பகுதியில் கரடுமுரடான காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரில் கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரயன்ட் மற்றும் மகள் கியன்னா உட்பட 9 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் 500 மீட்டர் உயரத்தில் இருந்து மோசமான வானிலை காரணமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோர சம்பவத்தினால் உலக அளவில் உள்ள ரசிகர்கள் மற்றும் அணைத்து துறையை சார்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் .
அவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட மீட்பு அதிகாரிகள் கூறுவது அவர்கள் உடல் சேதம் அடைந்ததால் அடையாளம் காண முடியவில்லை அவர்கள் துண்டு துண்டாக இருக்கிறார்கள் என்று கூறினார்கள். மேலும் அவர்களை மீக்கும் பணியில் மீட்பு படையினர் அந்த காட்டு பகுதியில் பறக்கும் கேமராவை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை படம் பிடித்தனர்.
விசாரணையில் ஹெலிகாப்டர் விமானி விமான நிலையத்திற்கு வழிப்பாதை அனுப்புமாறும் மேக மூட்டம் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் மேலே விமானத்தை இயக்க போவதாகவும் கூறினார் .மேலும் அடுத்து சில நொடிகளில் விமானம் மலை பகுதியில் இடித்து நொறுங்கி கீழ் விழுந்தது என்று கூறப்படுகிறது.
அப்படி பறக்கும் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து மீட்பு படையினர் செய்த சோதனை காட்சிகள் இதோ.
