Uncategorized
இன்னும் ஒரு மாதத்தில் திருணம்’.. “அதற்க்கு முன் உங்களோடு ஆசையுடன் சென்ற”.. ‘மாப்பிள்ளைக்கு’ மணமகளால்.. ‘நேர்ந்த பரிதாபம்..?
கர்நாடகாவில் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் மணமகள் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கடுமையாக தாக்கி உயிரிழந்துள்ளார் . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பெட்டதாபட்னா பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் அடிபட்டு காயங்களுடன் ரோட்டில் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து காவல் துறையில் புகார் அளித்தனர் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கொடூரமாக தாக்கப்பட்டு இருந்த இளைஞருக்கும், பெட்டதபுரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வரும் மார்ச் 13ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை, கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் அப்பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அப் பெண்ணிற்கு தான் படிப்பைத் மீண்டும் தொடர வேண்டும் என தான் ஆசை, இதனால் திருமணத்தை தள்ளி வைக்குமாறும் பெற்றோரிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி பெண்ணின் பெற்றோர் அதற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து திருமணத்தை நிறுத்த முடிவு செய்த அந்தப் பெண், தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு போன் செய்து உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டுமெனக் கேட்டுள்ளார். பின்னர் ஆசையுடன் வந்தார் மாப்பிள்ளை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர், சற்றும் எதிர்பாராத விதமாக அப்பெண் அந்த மாப்பிளையை தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.
மேலும் கல்லூரி படிப்பை படிப்பதற்கு இளம்பெண் ஒருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
