LATEST NEWS
ரஜினி பட பாடலை கம்பீரமாக பாடி அசத்திய ஜப்பானியர்.. மெய்சிலிர்த்து போன வைரமுத்து.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முத்து படம் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மாபெரும் அளவில் ஹிட்டாகி இன்றளவும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் உள்ளது. இதில் சரத்பாபு, மீனா, ராதா ரவி, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானிய மொழியில் டான்சிங் ராஜா என்ற பெயரில் முத்து திரைப்படம் வெளியானது.
இன்று வரை இந்த படத்திற்கு அங்கும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். முத்து திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆன போது ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்காக சர்வதேச வர்த்தக கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அந்த கருத்தரங்கத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கோபுகி சென் என்பவர் உரையாற்றினார். இவர் Mitsubishi நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். அவர் பேசும்போது தமிழ் எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ் நன்றாக தெரியும். சினிமா பாடல்களை நன்றாக பாடுவேன் என கூறியுள்ளார்.
மேலும் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்தினார். அந்த வீடியோவை பார்த்த பாடல் ஆசிரியர் வைரமுத்து அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு, ஒரு ஜப்பானியர் 77 வயது இளைஞர் என் பாடல் ஒன்றை பாடி என்ன போடு போடுகிறார் பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram