LATEST NEWS
அச்சச்சோ.. மறுபடியுமா..? லியோ ட்ரைலருக்கு வந்த புதுசிக்கல்…! கொந்தளிப்பில் தளபதி ரசிகர்கள்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருகின்றனர் .லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அனால் போலியாக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து அக்டொபர் 5 ஆம் தேதியான இன்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
வழக்கமாக விஜய் திரைப்படத்தின் ட்ரைலர் சென்னையில் ரோகினி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை அமைத்து தெரிவிப்பார்கள். இதற்கு தற்பொழுது காவல்துறையை அணுகி அனுமதி கேட்ட போது கோயம்பேடு காவல்துறையினர் காவல் ஆணையரை அணுகுமாறு கூறியுள்ளனர். இதனால் இன்று லியோ ட்ரைலர் வெளியாகுமா? என தளபதி ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.