LATEST NEWS
வித்தியாசமான முறையில் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய நடிகர் பாலசரவணன்… என்ன சொன்னாருன்னு தெரியுமா?…

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்த பல நடிகை, நடிகைகள் உள்ளன. அப்படி காமெடி கதாபாத்திரங்களில் ஒரு சில திரைப்படத்திலும் குண சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் நடிகர் பாலசரவணன். இவர் தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.
சசிகுமார் நடித்த குட்டிப்புலி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான இவர் அதற்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனாக்காலம் காலங்கள் என்ற தொடரில் நடித்துள்ளார். குட்டி புலி திரைப்படத்தை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், என்றென்றும், வேதாளம் , கூட்டத்தில் ஒருவன் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து, டான் உள்ளிட்ட திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகனாக வளம் வரும் இவர் ஹேமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு பாலசரவணன் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்டாக கார் ஒன்றை வாங்கி பரிசளித்து இருந்தார். தற்பொழுது இவர் தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram