CINEMA
இறப்பதற்கு முன்பு நடிகர் மாரிமுத்து கடைசியாக பேசிய போன் கால் இதுதான்… வெளியான ஆடியோ…!!

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன. குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று அவரின் இறுதி ஊர்வலம் தேனி பசுமலை தேரி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை மாரிமுத்து இறப்பதற்கு முன்பு இறுதியாக ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக போன் கால் பேசிய ஒரு ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க