CINEMA
விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில்…. ஹீரோவாக இந்த நடிகரா…? ஒரே குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெளியாகிய நிலையில் மக்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். மேலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவருடைய மகன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்துள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளுக்கும் அவர் படித்துள்ளார்.
சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார். இதனை ஒட்டி லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக சஞ்சய் அறிமுகமாக போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் இந்த படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. அந்த வகையில் தற்போது சஞ்சய் இயக்கும் படத்தில் சுதீப் கிஷான் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் ராயன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.