LATEST NEWS
அம்மாடியோ.. ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க… நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம் இவ்வளவா.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுவதும் சுமார் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் விநாயகர். இவரை விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் பலரும் பார்த்திருப்போம்.
இவர் மலையாளத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதற்காக விநாயகம் 35 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.