GALLERY
நடிகர் வினு சக்கரவர்த்தியின் மனைவி, பிள்ளைகள் யாருன்னு தெரியுமா…? இதுவரை நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!

பிரபல நடிகரான வினு சக்கரவர்த்தி மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

#image_title
உடல்நலம் குறைவு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு வினு சக்கரவர்த்தி உயிரிழந்தார். மதுரையில் பிறந்த வினு சக்கரவர்த்தி சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

#image_title
கல்லூரியில் படிக்கும்போதே நாடகம் எழுதுவதில் ஆர்வம் இருந்துள்ளது. அதன் விளைவாக பல்வேறு நாடகங்களை வினு சக்கரவர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.

#image_title
கல்லூரி முடித்த பிறகு காவல்துறையில் ஆய்வாளராக வேலை செய்துள்ளார். அங்கு 6 மாதங்கள் வேலை பார்த்துவிட்டு தெற்கு ரயில்வேயில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு நான்கு வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

#image_title
ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டு கன்னட இயக்குனர் புட்டன்னா கனகவலியிடம் கதை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

#image_title
இவர் பல்வேறு படங்களில் கதாசிரியராக வேலை பார்த்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

#image_title
அவர் தம்பிக்கு எந்த ஊரு, மண்வாசனை, மனிதன், அம்மன் கோவில் கிழக்காலே, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, அண்ணாமலை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

#image_title
அதில் முக்கியமாக சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் வினு சக்கரவர்த்தியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. அவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

#image_title
தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். வினு சக்கரவர்த்தியின் மிகப்பெரிய ஆசை ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே.

#image_title
ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என அவரது மனைவி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வினு சக்கரவர்த்தியின் மனைவி பெயர் கர்ண பூ. இவர்களுக்கு சண்முகப்பிரியா என்ற மகள் உள்ளார். அவர் அமெரிக்காவில் பேராசிரியராக இருக்கிறார். மகன் சரவண பிரியன் லண்டனில் மருத்துவராக இருக்கிறார்.

#image_title
உயிருடன் இருக்கும்போது வினு சக்கரவர்த்தி தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் வினு சக்கரவர்த்தியின் நடிப்பு திறமையை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர்.

#image_title