GALLERY
தனுஷ் முதல் சிவகார்த்திகேயன் வரை… பொங்கல் கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்…!!

உலகம் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய் தனது மனைவி, பிள்ளைகளுடன் எடுத்த புகைப்படம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் தனது மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை சங்கீதா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இதோ…

#image_title