LATEST NEWS
அந்த ரூமிலிருந்து வெளிய வர முடியல.. அவங்க காலில் விழுந்து கும்பிடனும்.. மனம் திறந்து பேசிய நடிகை மீனா..!!

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள ஜோடி நிகழ்ச்சியின் நடுவராக மீனா கலந்து கொள்கிறார். அதற்கான ப்ரோமோ வெளியானது. அதனை பார்த்து ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.
சமீபத்தில் மீனா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு காலகட்டத்தில் நான் கிளாமர் காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். அந்த நேரத்தில் என்னை சுற்றி இருந்தவர்கள் கிளாமர் ரோலில் நடிக்க முயற்சிக்கக் கூடாதா என கேட்டனர். அதனால் எனக்கும் முயற்சி செய்தால் என்ன என தோன்றியது.
ஆனால் நீச்சல் உடை அணிந்ததும் மேக்கப் அறையிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. அவ்வளவு நெருடலாக கூச்சமாக இருந்தது. அப்போதுதான் அந்த மாதிரியான கிளாமர் மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது என கூறியுள்ளார்.