TRENDING
என்னால முடியலன்னு சொன்னேன், ஆனா நைட்ல என்ன மட்டும்.. ஜெயம் ரவி படம் குறித்து மனம் திறந்த காதல் சரண்யா..!!

தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காதல். இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சந்தியா. இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு துல்லுற வயது என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதே சமயம் ஒரு வார்த்தை பேசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி இருந்தார். ஆனால் சில காரணங்கள் எல்லாம் அந்த திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் டென்த் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இருந்தாலும் அந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்த சரண்யா 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவர் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்புமும் கிடைக்காத நிலையில் ஒரு சில குறும்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் சரண்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேராண்மை திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில் அனைவரும் கிளம்பிய பிறகு இரவு நேரத்தில் ஒரு காட்சிக்காக தன்னை மட்டும் இருக்க வேண்டும் என்று கூறியதாக அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.