GALLERY
சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தமிழ் பட நடிகை.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..? ட்ரெண்டிங் ஜோடியின் கலக்கல் போட்டோஸ்..!!

நடிகை ஷிரின் காஞ்ச்வாலா மும்பையில் பிறந்தார். இவர் ஜெட் ஏர்வேசில் வானூர்தி பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு விராஜ் என்ற கன்னட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் தமிழில் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற தமிழ் படத்தில் ஷிரின் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து சிபிராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வால்டர் திரைப்படத்தில் ஷிரின் ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன் பிறகு சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
கடந்த ஐந்தாம் தேதி ஷிரினுக்கு தொழிலதிபரான அசார் முன்னுடன் மும்பையில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். மேலும் ஷிரின் கூறும்போது, அசாருடன் புதிய பயணத்தை தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என அசாரும் அவரது குடும்பத்தினரும் விரும்புகின்றனர்.
எப்போதும் அசார் என்னை என்கரேஜ் செய்வார் என கூறியுள்ளார். அவர்களது திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது நடிகை ஷிரின், அசார் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.