GALLERY
நீச்சல் உடையில் குடும்பத்துடன் குத்தாட்டம் போட்ட ஸ்ருதிகா.. இணையத்தில் ட்ரெண்டான போட்டோஸ்..!!

நடிகை ஸ்ருதிகா பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.
இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் திரைப்படத்திலும் ஸ்ருதிகா நடித்தார். அந்தப் படத்தை கவிதாலயா தயாரித்தது.
இதனையடுத்து மலையாளத்தில் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக சுவப்பனம் கொண்டு துலாபாரம் திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர் ஜீவா நடித்த தித்திக்குதே படத்தில் நடித்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி திரைப்படத்திலும் ஸ்ருதிகா அருமையாக நடித்தார்.
ஸ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஸ்ருதிகா போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
அவரது இயல்பான குழந்தைத்தனமான நடவடிக்கைகள் அனைவருக்கும் பிடித்து விட்டது. படங்களில் கிடைக்காத வரவேற்பு ஸ்ருதிகாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்தது.
இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிகாவுக்கு ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். நடிப்பு, வீடு, குடும்பம் என அனைத்தையும் ஸ்ருதிகா சிறப்பாக மேனேஜ் செய்வார்.
தற்போது ஸ்ருதிகா தனது குடும்பத்துடன் மார்டன் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.