Old vs New… கிளாசிக் பாடலுக்கு ஸ்டைலாக டான்ஸ் ஆடிய நடிகைகள்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

Old vs New… கிளாசிக் பாடலுக்கு ஸ்டைலாக டான்ஸ் ஆடிய நடிகைகள்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!

Published

on

பிரபல நடிகரான ஜெயம் ரவி பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ராஜேஷ் இயக்குகிறார். பிரபல இசை அமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் பிரதர் படத்திற்கு இசையமைக்கிறார்.

#image_title

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நயன்தாராவுடன் ஜெயம் ரவி இணைந்து நடித்த இறைவன் படம் எதிர்பார்த்த அளவிற்கு பேசப்படவில்லை. அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஜெயம் ரவி கமிட்டாகி வருகிறார்.

#image_title

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை பூமிகா, மூத்த தமிழ் நடிகைகள் சீதா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

#image_title

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிரியங்கா மோகன், பூமிகா, சீதா சரண்யா, பொன்வண்ணன் ஆகியோர் ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வரும் 2024-ஆம் ஆண்டு பிரதர், சைரன், கமல்ஹாசனின் thug life, காதலிக்க நேரமில்லை என பல படங்கள் வெளியாக உள்ளது. இனிவரும் ஆண்டு ஜெயம் ரவிக்கு சிறப்பாக ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in