LATEST NEWS
“இப்ப எதுக்கு திருமணம் அதெல்லாம் ஒன்னும் வேணாம்”.. நடிகை சுஷ்மிதா சென் திருமணத்தை தடுக்கும் தத்து பிள்ளைகள்.. காரணம் என்ன..??

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சுஷ்மிதா சென். இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழில் ரட்சகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதேசமயம் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்திலும் சகலக்க பேபி பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கவர்ந்தவர். இவருக்கு இந்தியில் பல நடிகர்களுடன் காதல் மலர்ந்த நிலையில் இறுதிவரை எதுவும் நிலைக்காததால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்டு பெண் குழந்தைகளை இவர் தத்தெடுத்த நிலையில் தற்போது தன்னுடைய சொந்த மகள்களைப் போல அவர்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், குழந்தைகள் மீது நான் அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன். அவர்கள் இருவருமே அப்பா இல்லை என்று எப்போதும் வருந்தியது கிடையாது. நான் திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும் இப்போது எதற்கு திருமணம் எங்களுக்கு அப்பா வேண்டாம் என்று சொல்லி தடுத்து விடுகிறார்கள்.
எனக்கு கணவர் தேவையோ என்று கூட அவர்கள் இருவருமே நினைப்பது இல்லை. என்னுடைய திருமணம் பற்றி நாங்கள் பலமுறை நகைச்சுவையாக நிறைய பேசிக் கொள்வோம். தந்தை இல்லை என்ற குறை இல்லாமல் இருவருமே தற்போது வளர்கிறார்கள். என்னுடைய தந்தை தான் அவர்கள் இருவருடனும் விளையாடுகிறார் என்று பேசியுள்ளார்.