“நாங்க என்ன சும்மாவா இருக்கோம்..?” முதல்வர் விஜய்யின் அப்ரோச்சால் கொந்தளிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க என்ன சும்மாவா இருக்கோம்..?” முதல்வர் விஜய்யின் அப்ரோச்சால் கொந்தளிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்..!!

Published

on

தமிழகத்தின் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த முடியாமல், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருவது ஆளும் கூட்டணிக்குள் பெரும் புகைச்சலையும் அதிர்வலைளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலே, அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளில் விஜய்யின் பாணி மரபுவழி அரசியல்வாதிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்து வருகிறது. இதனால், துறை சார்ந்த முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்குக் கூட அவரைச் சந்திப்பது அமைச்சர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் பெறவும், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் அனுமதி கேட்டு கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் பலமுறை நேரம் கோரியபோதிலும், முதலமைச்சர் தரப்பில் இருந்து சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைக்குத் தனது முழு நேரத்தையும் கட்சி கட்டமைப்பு மற்றும் வரவிருக்கும் களப்பணிகளில் மட்டுமே விஜய் தீவிரமாகச் செலுத்தி வருகிறார். இதனால், அரசுக் கட்டமைப்பு மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகளில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. அமைச்சர்களை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்து, அரசின் முக்கியச் செயலாளர்கள் மற்றும் உளவுத்துறை அறிக்கைகள் மூலமாகவே முதலமைச்சரின் அலுவலகம் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதால், அமைச்சர்கள் மத்தியில் ஒருவித தயக்கமும் பதற்றமும் நிலவி வருகிறது. கூட்டணிக் கட்சி அமைச்சர்களின் இந்த அதிருப்தி அதிகரித்தால் ஆட்சியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம் என்று ஒரு தரப்பு எச்சரித்தாலும், விஜய் தனது “சமரசம் இல்லாத” நிர்வாகப் பாணியிலிருந்து பின்வாங்கத் தயார் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in