TRENDING
அம்மாடியோ…. பிக்பாஸ் டைட்டில் வின்னரை விட அதிக சம்பளம் வாங்கிய கமல்ஹாசன்…. எவ்வளவு தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்து நேற்று நிறைவு பெற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேரும் பைனல் லிஸ்டில் தேர்வு செய்யப்பட்டனர். பிறகு ஷிவின் வெளியேற்றப்பட்ட நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் இவர்களில் யாராவது ஒருவர் தான் வெற்றியாளர்கள் என்று ரசிகர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் கோப்பையை தட்டி தூக்கினார். அவருக்கு முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் 15 எபிசோடுகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ள நிலையில் அவர் இந்த சீசனில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு வாங்கிய சம்பளத்தை விட இந்த சீசனுக்கு கமல்ஹாசன் அதிக தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார்.
அதன்படி இந்த சீசனில் 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி என 15 எபிசோடுகளுக்கும் சேர்த்து மொத்தம் 75 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் அவரை விட பல மடங்கு அதிகமாக கமல்ஹாசன் சம்பளம் வாங்கி இருப்பது பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.