LATEST NEWS
இரவோடு இரவாக ஷாக்.. நாங்கள் தவெகவுடன் கூட்டணியில் இல்லை… CPI வீரபாண்டியன் திட்டவட்ட அறிவிப்பு…!!
தவெக அமைச்சர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இணையவுள்ளதாகப் பரவிய தகவல்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெகவுடன் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான கூட்டணியும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், “நாங்கள் கூட்டணியிலும் இல்லை, தவெக அமைச்சரவையிலும் இல்லை; தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி போன்ற அசாதாரண சூழல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்” என்று தங்களது அரசியல் நிலைப்பாட்டை அவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தவெகவின் கொள்கைகள் குறித்தும், தங்களது கட்சியின் எதிர்கால அணுகுமுறை குறித்தும் வீரபாண்டியன் இந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் முழுமையான மதச்சார்பின்மையை நோக்கித் தன்னை நகர்த்திக் கொள்ளும் வரை, தவெகவின் செயல்பாடுகளைத் தங்களது கட்சி தொடர்ந்து விமர்சிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சிபிஐ கட்சி தவெக கூட்டணிக்குள் நுழையப் போகிறது என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெகவின் கொள்கை ரீதியான பாதையைத் தொடர்ந்து கண்காணித்து விமர்சனங்களை முன்வைப்போம் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
