VIDEOS
ஜாலியாக லண்டன் டிரிப் சென்ற பிக்பாஸ் மகேஸ்வரி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
திருமணமான காரணத்தினால் தனது கேரியருக்கு சற்று பிரேக் விடுத்தார். கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது இவருக்கு கேசர் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். இதனிடையே சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மகேஸ்வரி போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி தற்போது லண்டன் சென்று உள்ள நிலையில் அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க