LATEST NEWS
அமைச்சர் வன்னி அரசுக்கு செக்!.. “30 நாளில் வேலை நடக்கலனா எனக்கு கால் பண்ணுங்க!”… மாணவனிடம் தன் போன் நம்பரை கொடுத்த விஜய்…!!
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சென்னையில் உள்ள சமூக நீதி மாணவர் விடுதியில் நடத்திய அதிரடித் திடீர் ஆய்வு, அரசு வட்டாரங்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் பயணம் தனது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்களுக்குக் கூட தெரியாதவாறு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு விடுதிக்குச் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், அமைச்சர் பதற்றத்துடன் அங்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே விடுதிக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் புகார்களைக் கேட்டறிந்தார். தரமான உணவு, விளையாட்டு மைதானத்தைத் திறப்பது, கொசுத் தொல்லைக்குத் தீர்வு மற்றும் இரவு நேரத்தில் தாமதமாக வரும் மாணவர்களைத் திட்டாமல் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும், தனது பிரத்தியேக தொலைபேசி எண்ணை ஒரு மாணவரிடம் வழங்கிய முதலமைச்சர் விஜய், அடுத்த 30 நாட்களில் இந்தச் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் நேரடியாகத் தனக்கே அழைக்குமாறும், அடுத்த 15 நிமிடங்களில் தான் மீண்டும் அங்கு வரத் தயார் என்றும் கூறிச் சென்றது விடுதி நிர்வாகத்தினரைக் கலக்கமடையச் செய்துள்ளது. விசிக-வைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு தனது துறையைச் சரியாகக் கவனிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்த நிலையில், அவருக்குச் சரியான பாடம் புகட்டவே முதலமைச்சர் இந்த அதிரடி ஆய்வைக் கையில் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் எந்த நேரத்திலும் தங்களது துறை சார்ந்த இடங்களுக்கும் திடீர் ஆய்வு நடத்த வரலாம் என்ற அச்சத்தில் அனைத்து அமைச்சர்களும் தற்போது சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கியுள்ளனர். நிர்வாக ரீதியாக விஜய் மேற்கொண்டு வரும் இந்த மாஸ் ஆக்ஷன் நடவடிக்கைகள், தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு குட்டி சிங்கப்பூராக மாற்றும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளது.
