தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் தெரியுமா?.. இதோ சிறப்பு தொகுப்பு…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் தெரியுமா?.. இதோ சிறப்பு தொகுப்பு…!!

Published

on

நிலவுக்குச் செல்லும் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை சுமந்தபடி கடந்த ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு lvm3 எம் 4 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியை சுற்றி வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திராயன் 3 விண்கலம் விளக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணம் பாதை மாற்றம் செய்யப்பட்டது.

நிலவிற்கு மிக நெருக்கமாக அதாவது இறுதி கட்ட சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து லேண்டெர் கலன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இந்த விண்கலம் நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கியது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

சந்திரயான் 3 வெற்றிக்கு இந்திய அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர் தான் இந்த திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல். தமிழ்நாட்டில் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை மற்றும் எம் வனிதா ஆகியோர் சந்திரயான் 1, 2 ஆகியவற்றை இயக்கிய பிறகு விழுப்புரத்தை சேர்ந்த பி. வீரமுத்துவேல் தற்போது நிலவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள சந்தரயான் திட்டத்திற்கு இயக்குனராக உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குடும்பத்தை சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற வீர முத்துவேல் சென்னையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in