“வரிப்பணத்தில் கை வச்சா அவ்ளோதான்”.. ஒரே உத்தரவில் மொத்தமாக ரத்து.. தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய முதலமைச்சர் விஜய்யின் மாஸ் உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வரிப்பணத்தில் கை வச்சா அவ்ளோதான்”.. ஒரே உத்தரவில் மொத்தமாக ரத்து.. தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய முதலமைச்சர் விஜய்யின் மாஸ் உத்தரவு..!!

Published

on

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுப்பணி, மின்சாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய முக்கியத் துறைகளில் கடந்த சில வாரங்களாக அவசர அவசரமாக வெளியிடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால அரசு ஒப்பந்தப் புள்ளிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரத் தேவைகளைத் தவிர மற்ற நேரங்களில் வழக்கமான டெண்டர் நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவை மீறி, மே 13 முதல் மே 22 வரை இந்த டெண்டர்கள் கோரப்பட்டதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்க இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் கரப்பேட்டையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வெறும் 6 மணி நேர அவகாசத்தில் டெண்டர் வெளியிடப்பட்டு சர்ச்சையானதைத் தொடர்ந்து, அது உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், அரசின் அறிவுறுத்தல்களை மீறி செயல்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு ஒப்பந்தங்களில் 100% நேர்மையைக் கொண்டு வரும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் அனைத்துத் துறைகளும் நிலையான டெண்டர் விதிமுறைகளைப்பின்பற்றி, கூடுதல் கால அவகாசத்துடன் புதிய டெண்டர்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தவெக அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in