CRIME
சீ… இப்படியும் ஒரு மனைவியா..? வெளில சொன்ன நெட்ல விட்ருவோம்..! கணவனுடன் சேர்ந்து தோழியை சீரழித்து.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி..!!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு, அங்கு உடற்பயிற்சி செய்ய வந்த எப்சியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்த எப்சியா, ஜிம் உரிமையாளரான அந்தப் பெண்ணுடன் நட்பாகப் பழகி, தனது குடும்ப வறுமையைக் கூறி உதவி கேட்டுள்ளார். மேலும், தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு அந்தப் பெண்ணை வற்புறுத்தி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் எப்சியாவின் வீட்டிற்கு அந்தப் பெண் சென்றுள்ளார். அப்போது எப்சியாவும் அவரது கணவர் மணிவண்ணனும் சேர்ந்து அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளனர். அதனைத் குடித்த பெண் மயக்கமடைந்த நிலையில், மணிவண்ணன் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவரது மனைவி எப்சியா தனது செல்போனில் ஆபாச வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணை, இந்த விஷயத்தை வெளியில் கூறினால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று தம்பதியினர் மிரட்டியுள்ளனர்.
இந்த ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி, கடந்த ஆறு மாதங்களாக அந்தப் பெண்ணிடமிருந்து ரூ. 4,50,000 பணம், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தம்பதியினர் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மேலும் பணம் தர முடியாததால் மனமுடைந்த ஜிம் உரிமையாளர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர், மணிவண்ணன் மற்றும் எப்சியா ஆகிய இருவரையும் கைது செய்து, இதேபோல வேறு யாரையேனும் அவர்கள் ஏமாற்றியுள்ளார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
