LATEST NEWS
டான்ஸ் மாஸ்டர் இப்போது இயக்குநரா மலைக்க வைக்கும் புகைப்படங்கள் விவரம் இதோ….

தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் கலர்ஸ் தமிழில் நடன நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்து வருகிறார்.மற்றும் பல நிகழ்ச்சில்களில் நடுவராகவும் இருந்தார்.
தற்போது இவர் முதல் முறையாக இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். இவருடைய முதல் படத்தில் நாயகனாக பிரபல காதல் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். நாயகியாக இரு மிகப் பெரும் அழகிகளான அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்த விழாவில் இயக்குனர் மணிரத்தினம்,அவர்மனைவியும் நடிகையுமான சுகாசினி, நடிகை குஷ்பூ, இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த படங்களை படக்குழு வெளியிட்டது. அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இப்படம் காமெடி கலந்த ஒரு காதல் படமாக உருவாக இருப்பதாகவும் படத்தை பற்றிய சில தகவல்கள் கசிந்து உள்ளன.
படத்திற்கு ஹேய் சினமிகா என பெயரிட்டுள்ளனர், இப்படத்தை ஜியோ சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் மூலம் தமிழ் திரையில் தனது முதல் காலடியை வைப்பது வைப்பது குறிப்பிடத்தக்கது.
.